கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஈஷா வளாகத்தை பயன்படுத்து கொள்ளலாம்‌ - ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு அறிவிப்பு

கோவை: கொரோனா வைரஸ்‌ பாதிப்பு தீவிரமடைந்து பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க கூடுதல்‌ இடம்‌ தேவைப்படும்‌ சூழல்‌ உருவானால்‌, ஈஷா வளாகத்தை தமிழக அரசு பயன்படுத்தி கொள்ளலாம்‌ என ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு தெரிவித்துள்ளார்‌. மேலு‌ம்‌, தேவைப்பட்டால்‌, அரசு மருத்துவமனைகளில்‌ சேவையாற்றவும்‌ ஈஷா தன்னார்வலர்கள்‌ தயாராக இருப்பதாக அவர்‌ கூறியுள்ளார்‌.

கோவை: கொரோனா வைரஸ்‌ பாதிப்பு தீவிரமடைந்து பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க கூடுதல்‌ இடம்‌ தேவைப்படும்‌ சூழல்‌ உருவானால்‌, ஈஷா வளாகத்தை தமிழக அரசு பயன்படுத்தி கொள்ளலாம்‌ என ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு தெரிவித்துள்ளார்‌. மேலு‌ம்‌, தேவைப்பட்டால்‌, அரசு மருத்துவமனைகளில்‌ சேவையாற்றவும்‌ ஈஷா தன்னார்வலர்கள்‌ தயாராக இருப்பதாக அவர்‌ கூறியுள்ளார்‌.

கொரோனா வைரஸ்‌ பாதிப்பால்‌ இந்தியாவில்‌ லட்சக்கணக்கான தினக்‌ கூலி தொழிலாளர்களின்‌ வாழ்வாதாரம்‌ பெரிதும்‌ பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்‌, அவர்களுக்கு உதவும்‌ விதமாக, மத்திய, மாநில அரசுகள்‌ பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. 

இந்நிலையில்‌, உலகம்‌ முழுவதும்‌ கோடிக்கணக்கான தன்னார்வலர்களை கொண்டுள்ள ஈஷா அறக்கட்டளையும்‌ இந்த சவாலான சூழலில்‌ மக்களுக்கு சேவையாற்ற உறுதி ஏற்றுள்ளது. இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு அவர்கள்‌ ஈஷா

தன்னார்வலர்களுக்கு சில வேண்டுகோள்‌ விடுத்துள்ளார்‌.

அதில் அவர்‌ கூறியுள்ளதாவது: கொரோனா வைரஸால்‌ பாதிப்புக்கு உள்ளாகும்‌ தினக்‌ கூலி தொழிலாளர்கள்‌ உள்ளிட்டோரை பாதுகாக்க உலகம்‌ முழுவதும்‌ உள்ள ஈஷா தன்னார்வலர்கள்‌ தங்களால்‌ இயன்றதை செய்ய வேண்டும்‌. குறிப்பாக, இந்தியாவில்‌ உள்ள ஈஷா தன்னார்வலர்கள்‌ ஒவ்வொருவரும்‌ தங்கள்‌ பகுதியில்‌ வேலையின்மையின்‌ காரணமாக, பட்டினியால்‌ வாடும்‌ 2 பேருக்காவது உணவு அளித்து உதவ வேண்டும்‌ என்றார். 

அதேபோல, நீங்கள்‌ உலகில் எங்கிருந்தாலும்‌, உணவின்றி பட்டினியால்‌ ஒருவர்‌ இறந்தார்‌ என்ற நிலை வராமல்‌ இருப்பதை உறுதி செய்ய வேண்டும்‌. இந்த இக்கட்டான சூழலில்‌ ஒவ்வொரு குடிமக்களும்‌ தனிநபராக நம்மால்‌ இயன்றதை செய்வது மட்டுமின்றி, உள்ளூர்‌ அரசு நிர்வாகம்‌ எடுக்கும்‌ அனைத்து முயற்சிகளுக்கும்‌ ஒத்துழைப்பு அளிப்பது நமது கடமை. இவ்வாறு அவர்‌ கூறியுள்ளார்‌.

மேலும்‌, தமிழகத்தில்‌ கொரோனா வைரஸ்‌ பாதிப்பு தீவிரமடைந்து, பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க கூடுதல்‌ இடம்‌ தேவைப்படும்‌ சூழல்‌ உருவானால்‌, ஈஷா வளாகத்தை தமிழக அரசு பயன்படுத்தி கொள்ளலாம்‌ எனவும்‌ அவர்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...