கோவை ஆர். எஸ். புரம் பகுதியில் திறக்கப்பட்ட உழவர் சந்தையை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

கோவை: கோவையில் தனியார் துறையில் காய்கறிகள் மிகவும் அதிக விலைக்கு விற்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டிய நிலையில், ஆர். எஸ். புரம் பகுதியில் திறக்கப்பட்ட உழவர் சந்தையை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

கோவை: கோவையில் தனியார் துறையில் காய்கறிகள் மிகவும் அதிக விலைக்கு விற்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டிய நிலையில், ஆர். எஸ். புரம் பகுதியில் திறக்கப்பட்ட உழவர் சந்தையை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து அனைத்தும் முடங்கியுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு தங்குதடையின்றி அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை உட்பட பொருட்கள் அனைத்தும் கிடைக்கச் செய்யும் வகையில் மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்டவைகளை திறந்து வைத்து மக்களுக்கு வழங்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து, கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் காய்கறிகள், மளிகைகள் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால், தனியார் துறையில் காய்கறிகள் மிகவும் அதிக விலைக்கு விற்பதாக குற்றம்சாட்டிய பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். 

இதையடுத்து, உடனடியாக பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், கோவை ஆர். எஸ். புரம் பகுதியில் உள்ள உழவர் சந்தை திறக்கப்பட்டது. அதேபோல் சிங்காநல்லூர் உழவர் சந்தையும் திறக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து மக்கள் அதிகமாக கூட்டம் கூடி நெருங்கி நிற்கக் கூடாது என்று அடிப்படையில் உழவர் சந்தையில் ஆங்காங்கு தரைகளில் சுமார் ஒரு மீட்டர் அளவிற்கு கட்டம் இட்டுள்ளனர். அதில் பொதுமக்கள் வரிசையாக நின்று காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். 

தனியார் துறைகளில் காய்கறிகள் விலை உயர்வாக இருந்த நிலையில் தற்போது உழவர் சந்தையில் மிகவும் குறைவாக கிடைப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து இச்சந்தையில் அரசின் அறிவுறுத்தலின்படி நடைபெறுகிறதா இன்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...