கொரோனா எதிரொலி: வெளிநாடுகளிலிருந்து கோவை வந்த 1,014 பேர் கண்காணிப்பு; புதிதாக 30 பேர் கொரோனா அறிகுறியுடன் அனுமதி!

கோவை: கோவை மாவட்ட சுகாதாரத் துறையின் கண்காணிப்பின் கீழ் வெளிநாடுகளில் இருந்து கோவை வந்த 1014 பேரின் விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை: கோவை மாவட்ட சுகாதாரத் துறையின் கண்காணிப்பின் கீழ் வெளிநாடுகளில் இருந்து கோவை வந்த 1014 பேரின் விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரசின் தாக்கத்தினால் உலகம் முழுவதும் உள்ள 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்புகளையும் இதன் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் பொருட்டு இந்தியாவில் பொது மக்கள் நடமாட்டத்தை குறைக்க மத்திய அரசு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வெளிநாடுகளுக்கு சென்று கோவை வந்தவர்களின் விவரம் தொடர்ச்சியாக சேகரிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவரங்களை மத்திய அரசு பொது சுகாதாரத்துறையிடம் நோய் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு ஒப்படைத்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறும் போது;-

பாஸ்போர்ட்டுகளை ஆய்வு செய்ததில், 1,014 பேரின் விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, அதிகாரிகள் மூலம், அவர்களது வீடுகளில், ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி நடந்து வருகிறது. 

மேலும், இ.எஸ்.ஐ மருத்துவமனையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இருவரை தவிர, புதிதாக 30 பேர் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...