கொரோனா தடுப்பு நடவடிக்கை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு

கோவை: கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கோவை மாநகராட்சி சார்பில் இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.


கோவை: கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கோவை மாநகராட்சி சார்பில் இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மருத்துவ வசதிகளும் செய்து வருகிறது.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் பிரத்தியேக வார்டுகள் அமைக்கப்பட்டு நோய் அறிகுறி உள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் என கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சி சார்பில் தொடர்ச்சியாக தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மாநகராட்சி நிர்வாகம் சார்பாக ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் துவங்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில், இதன் தொடர்ச்சியாக இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளானது நடைபெற்றது.

கோவை மாநகரில் இந்த பணியானது அடுத்த 20 நாட்களுக்கு தொடர இருப்பதாகவும், கொரோனா பாதிப்பு மற்றும் அறிகுறிகள் இருப்பதாக கண்டறியப்படும் நபர்கள் வசித்த பகுதிகளில் டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ட்ரோன் 5 லிட்டர் எடையில் உள்ள கிருமிநாசினியைச் சுமந்தபடி 50 மீட்டர் உயரமும் 2 கிலோமீட்டர் தூரமும் செல்லக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...