கொரோனா தடுப்பு நடவடிக்கை: திருப்பூரில் 1156 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தகவல்

திருப்பூர்: திருப்பூரில் 1156 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் உழவர் சந்தைகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்தார்


திருப்பூர்: திருப்பூரில் 1156 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் உழவர் சந்தைகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்தார்.



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் இன்று திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தை, அம்மா உணவகம் மற்றும் மீன் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். 



அப்போது, அங்கிருந்த வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடைவெளிவிட்டு பொருட்களை வாங்குமாறு முககவசம் இல்லாமல் வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பூரில் அத்தியாவசிய வாழ்க்கை பாதிக்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அந்தந்த பகுதி மளிகை கடைகளின் தொடர்பு எண்ணை சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளதாகவும் அதன் மூலம் போன் செய்து ஆர்டர் கொடுத்துவிட்டு கூட்டம் இல்லாத நேரத்தில் சென்று பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். 

மேலும், திருப்பூரில் வீட்டு கண்காணிப்பில் 1156 பேர் இருப்பதாகவும் அவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி எதுவும் இல்லை எனவும் உறுதிப்படுத்தினார். அதேபோல், சாலையில் அத்தியாவசியம் இன்றி யாரும் செல்ல வேண்டாம் எனவும் அவர் அவ்வாறு செல்பவர்கள் மீது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...