வால்பாறையில் குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை; போலீசார் விசாரணை

கோவை: வால்பாறையில் குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: வால்பாறையில் குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை மாவட்டம் வால்பாறை வாழைத்தோட்டத்தை சேர்ந்தவர் ராஜன் என்பவரது மனைவி திலகவதி (எ) ஆஷா(42). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் 10 வயதில் ஒரு ஆண் குழந்தை சுபாஷ் உள்ளது.

திலகவதி வில்லோணி எஸ்டேட்டை சேர்ந்தவர். இவர் ராஜனை இரண்டாவது கணவராக திருமணம் செய்துள்ளார். இவரது முதல் கணவர் பெயர் சுதாகர், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சுதாகருக்கு இரண்டு ஆண் குழந்தை உள்ளது. ராஜன் இரண்டாவது கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வால்பாறையில் உள்ள பிரபல ஹோட்டலில் ராஜன் சூப்பர்வைசராக பணிபுரிகிறார். இவருக்கும் மனைவி திலகவதிக்கும் காலையில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. 



இதனால் கணவன் வேலைக்கு சென்றவுடன் திலகவதி வீட்டிலுள்ள விட்டத்தில் கயிற்றை மாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதையடுத்து, மதியம் கணவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது மனைவி திலகவதி தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 



தொடர்ந்து வால்பாறை காவல் ஆய்வாளர் பாலமுருகன் திலகவதியில் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...