கோவை: மேட்டுப்பாளையம் அருகே தமிழக கேரள எல்லையில் உள்ள மலை கிராமங்களில் நக்சல் தடுப்பு மற்றும் அதிரடிப்படை போலீசார் கொரோனோ நோய் தொற்று குறித்து செயல்முறை விளக்கத்துடன் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த ஆனைகட்டி மற்றும் அதனை சுற்றி கொண்டனூர், குறவங் கண்டி, மேல்பாவி, உட்பட ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. தமிழக கேரள எல்லைப் பகுதியான இங்கு பெரும்பாலும் இருளர் இன ஆதிவாசி மக்களே வசித்து வருகின்றனர்.
விவசாயக் கூலி தொழிலாளர்களாகவும், வனப் பொருட்களை சேமித்தல் போன்ற தொழில்களையும் செய்து வரும் இவர்கள், போதிய கல்வி அறிவு இல்லாதவர்களாக உள்ளனர். இதனால் உலக நாடுகள் அனைத்தையும் தற்பொழுது உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்று குறித்து முழுமையான விழிப்புணர்வு இல்லாதவர்களாக உள்ளனர்.

அரசின் திட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து முழுமையாக தெரியாத நிலையில் இப்பகுதியில் முகாம் அமைத்து தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் கிராம மக்களிடம் கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.
மேலும், கெரோனோ நோய் தொற்று பரவாமல் தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்தும் எடுத்துக் கூறினர். கேரள எல்லைப் பகுதியாக இருப்பதால் அங்கிருந்து நோய் தொற்று தமிழகத்திற்கு ஏற்படாமல் இருக்கும் வண்ணம் சுகாதாரத் துறையின் ஆலோசனையைப் பெற்று ஆதிவாசி மக்களிடம் நேரடி செயல்முறை விளக்கத்துடன் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து வருவதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.