கோவை: பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு மற்றும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் நிதியுதவி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு சண்முகசுந்தரம் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மேற்கண்ட சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கொரனா வைரஸ் (கோவிட் 19) பாதிப்புகளை எதிர்கொள்ள தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்கிக் கொள்வதற்கு தேவையான நிதியை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய்.50,00,000.00 (ஐம்பது லட்சம்) ஒதுக்கீடு செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு பரிந்துரை செய்வதாக கூறியுள்ளார்.
மேலும், திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மடத்துக்குளம், உடுமலை பேட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள பொள்ளாச்சி, வால்பாறை, தொண்டாமுத்தூர் மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளில் கொரனா வைரஸ் (கோவிட் 19) பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்க அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் வழங்க உரிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டுமென தெரிவித்தார்.