மேட்டுப்பாளையத்தில் காய்கறிகளை வாங்க வியாபாரிகள் வராததால் மொத்த காய்கறி ஏல மையம் இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை மூடல்!

கோவை: மேட்டுப்பாளையத்தில் காய்கறிகளை வாங்க வியாபாரிகள் வராததால் மொத்த காய்கறி ஏல மையம் இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை மூடுவதற்கு மார்க்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கோவை: மேட்டுப்பாளையத்தில் காய்கறிகளை வாங்க வியாபாரிகள் வராததால் மொத்த காய்கறி ஏல மையம் இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை மூடுவதற்கு மார்க்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மொத்த காய்கறி ஏல மையமானது செயல்பட்டு வருகிறது. இங்கு நீலகிரி மற்றும் ஆசனூர், தாளவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கேரட், பீன்ஸ், பீட்ரூட், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் கொண்டுவரப்பட்டு தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. தினசரி 50 டன் காய்கறிக்கு மேல் அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுப் பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வந்தது

இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் கொரானோ அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒரு வாரமாக காய்கறிகளை வாங்க வியாபாரிகள் தயக்கம் காட்டி வந்ததால் ஏற்றுமதி படிப்படியாக குறைந்தது. 



இந்த நிலையில், தற்போது அது முற்றிலுமாக குறைந்து பல டன் காய்கறியானது தேக்கமடைந்தது. எனவே, அழுகும் பொருட்களை இருப்பு வைக்க முடியாது என்பதால் இன்று முதல் வரும் 31ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு மேட்டுப்பாளையம் காய்கறி மொத்த ஏல மையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...