ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றியவர்களுக்கு நூதன தண்டனை..! புதுமண தம்பதிகளுக்கு முக கவசம் வழங்கி அறிவுரை வழங்கிய கோவை போலீசார்!

கோவை: ஊரடங்கு தடை உத்தரவை மீறி வெளியே சுற்றியவர்களுக்கு நூதன தண்டனை வழங்கியும் வாகன சோதனையின் போது புதுமண தம்பதிகளுக்கு முக கவசம் வழங்கி அறிவுரை வழங்கிய கோவை போலீசாரின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

கோவை: ஊரடங்கு தடை உத்தரவை மீறி வெளியே சுற்றியவர்களுக்கு நூதன தண்டனை வழங்கியும் வாகன சோதனையின் போது புதுமண தம்பதிகளுக்கு முக கவசம் வழங்கி அறிவுரை வழங்கிய கோவை போலீசாரின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று இரண்டாவது நாளாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வெளியே வருபவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு, வாகனம் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், வீட்டை விட்டு தேவையின்றி சுற்றியவர்களுக்கு கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் துறையினரின் நூதன தண்டனை வழங்கினர். கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.

அப்போது, அவ்வழியாக அத்தியாவசிய காரணங்கள் இன்றி சுற்றிய நபர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கொரோனா வைரஸ் என்றால் என்ன, எப்படி பரவுகிறது என்பது குறித்து காவல் துறையினர் எடுத்துரைத்து முக கவசங்களை வழங்கினர். மேலும், தேவையின்றி ஊர் சுற்றுபவர்களை பிடித்து கொரோனா வைரஸ் குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்ற நூதன தண்டனையை வழங்கினர்.

இதனிடையே, சூலூரில் இன்று திருமணம் முடித்து அவிநாசி நோக்கி காரில் பயணம் செய்த புதுமண தம்பதியினர் கருமத்தம்பட்டி வழியாக காரில் சென்றனர். காவல் துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது தம்பதிகள் முக கவசம் அணியாமல் இருந்ததை கண்டு இருவருக்கும் முக கவசங்களை வழங்கிய காவல் துறையினர் கொரோனா வைரஸ் மற்றும் முக கவசம் அணிய வேண்டிய அவசியத்தியத்தை எடுத்துரைத்தனர். காவல் துறையினர் இந்த செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...