கேரள தொற்று நோய் பரவல் தடுப்பு அவசர சட்டம் 2020 பிறப்பிக்க ஆளுநரிடம் சிபாரிசு செய்யப்படும்: முதல்வர் பினராய் விஜயன்

கேரள தொற்று நோய் பரவல் தடுப்பு அவசர சட்டம் 2020 பிறப்பிக்க ஆளுநரிடம் சிபாரிசு செய்யப்படும் என அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள தொற்று நோய் பரவல் தடுப்பு அவசர சட்டம் 2020 பிறப்பிக்க ஆளுநரிடம் சிபாரிசு செய்யப்படும் என அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

கேரளாவில் தொற்று நோய்களை பரவ விடாமல் தடுக்க கடும் நடவடிக்கை ஏற்படுத்துவதற்காக கேரள தொற்றுநோய் தடுப்பு அவசர சட்டம் 2020 அமல்படுத்த ஆளுநரிடம் சிபாரிசு செய்ய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது அமலில் உள்ள திருவிதாங்கூர் தொற்றுநோய் தடுப்பு சட்டம் மற்றும் கொச்சின் தொற்றுநோய் தடுப்பு சட்டம் ஆகியவற்றை ரத்து செய்துவிட்டு 1797ம் வருட தொற்றுநோய் தடுப்பு சட்டத்தை மலபார் பகுதியில் செயல்படுவதை நிறுத்தி வைத்தும் இந்த அவசர சட்டம் கொண்டு வரப்படுகிறது.

பொதுமக்களும், தனி நபர்களும், குழுக்களும் நடத்துகின்ற நிகழ்ச்சிகளை கட்டுப்படுத்த இந்த அவசர சட்டம் அரசுக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும். இந்த சட்டத்தின்படி மாநில எல்லைகளை அரசால் மூட முடியும். பொது மற்றும் தனியார் போக்குவரத்து வாகனங்களை கட்டுப்படுத்தலாம். சமூக கட்டுப்பாடு நிபந்தனைகளை கொண்டுவரலாம். பொது இடங்களிலும், மத வழிபாட்டு தலங்களிலும் ஆட்கள் கூடுவதையும், கட்டுப்படுத்தவும், தடை செய்யவும் முடியும். அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தலாம். தொழிற்சாலைகள், கடைகள், கிட்டங்கிகள் ஆகியவற்றின் மீதும் கட்டுப்பாடு கொண்டு வரலாம். அவசியம் சர்வீசுக்கு நேரக் கட்டுப்பாட்டை கொண்டுவரலாம் என்றார்.

மேலும், இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு இரண்டு வருடம் வரை சிறை, அல்லது பத்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கலாம். சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக போலீஸ் நேரடியாக வழக்கு பதிவு செய்ய முடியும். கோரோனா நோய் தடுப்புக்கான பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்கவும், உற்பத்தி செய்யவும் டெண்டர் இல்லாமல் அனுமதி அளிக்கப்படும். நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக அனைத்து மதுக்கடைகளையும், கள்ளுக்கடைகளையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

கேரளாவில் நேற்று மேலும் 9 பேருக்கு கோவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், தலா இரண்டு பேர் பாலக்காடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களையும், தலா ஒருவர் இடுக்கி மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர். இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் துபாயில் இருந்தும், தலா ஒருவர் இங்கிலாந்து மற்றும் பிரான்சில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். 3 பேருக்கு வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததால் இந்த நோய் வந்துள்ளது என்றார்.

மேலும், கேரளா முழுவதும் தற்போது 72,542 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 76,010 வேர் வீடுகளிலும், 532 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். புதன்கிழமை அன்று மட்டும் 122 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கேரளாவில் இதுவரை நோய் உறுதி செய்யப்பட்ட 118 பேரில் 97 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். இவர்களில் வெளிநாட்டை சேர்ந்த 8 பேரும் உண்டு. மீதமுள்ள 19 பேருக்கு அவர்களுடன் தொடர்பில் இருந்ததால் நோய் பரவியது. இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 12 பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...