கோவை: கோவையில் 144 தடை உத்தரவையடுத்து பொது மக்கள் சாலைகளில் பயணம் செய்யக்கூடாது என்ற நிலையில் அத்தியாவசிய தேவைக்காக செல்பவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கொரோனா வைரசின் தாக்கத்தினால் உலகம் முழுவதும் உள்ள 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இந்த உயிரிழப்புகளையும் இதன் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் பொருட்டு இந்தியாவில் பொதுமக்கள் நடமாட்டத்தை குறைக்க மத்திய அரசு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள போக்குவரத்துகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று காலை முதல் போலீசார் பொது மக்கள் சாலைகளில் பயணிக்க வேண்டாம் என தொடர்ச்சியாக தெரிவித்து வந்தனர். ஆனால், சிறிது நேரம் ஆக ஆக தாக்குதல் நடத்தத் துவங்கி விட்டனர். மேலும், சாலையில் செல்பவர்களை எந்த விசாரணையும் செய்யாமல் லத்தியால் தாக்கியதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், போலீசார் தாக்குதல் நடத்துவதற்கு முன் காரணங்களை விசாரிக்க வேண்டும் எனவும், அலட்சியமான காரணங்கள் இருப்பின் வழக்குப்பதிவு செய்தோ வாகனங்களை பறிமுதல் செய்தோ சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.144 தடை உத்தரவால் சாலையில் பயணிப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தும் போலீசார்; அத்தியாவசிய தேவைக்காக செல்பவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என பொதுமக்கள் கோரிக்கை
கோவை: கோவையில் 144 தடை உத்தரவையடுத்து பொது மக்கள் சாலைகளில் பயணம் செய்யக்கூடாது என்ற நிலையில் அத்தியாவசிய தேவைக்காக செல்பவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கொரோனா வைரசின் தாக்கத்தினால் உலகம் முழுவதும் உள்ள 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இந்த உயிரிழப்புகளையும் இதன் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் பொருட்டு இந்தியாவில் பொதுமக்கள் நடமாட்டத்தை குறைக்க மத்திய அரசு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள போக்குவரத்துகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று காலை முதல் போலீசார் பொது மக்கள் சாலைகளில் பயணிக்க வேண்டாம் என தொடர்ச்சியாக தெரிவித்து வந்தனர். ஆனால், சிறிது நேரம் ஆக ஆக தாக்குதல் நடத்தத் துவங்கி விட்டனர். மேலும், சாலையில் செல்பவர்களை எந்த விசாரணையும் செய்யாமல் லத்தியால் தாக்கியதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், போலீசார் தாக்குதல் நடத்துவதற்கு முன் காரணங்களை விசாரிக்க வேண்டும் எனவும், அலட்சியமான காரணங்கள் இருப்பின் வழக்குப்பதிவு செய்தோ வாகனங்களை பறிமுதல் செய்தோ சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.