வால்பாறையில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் பயணிக்கும் பொதுமக்களை எச்சரித்து காவல்துறையினர் கொடி அணிவகுப்பு!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் பயணிக்கும் பொதுமக்களை எச்சரித்து வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் பயணிக்கும் பொதுமக்களை எச்சரித்து வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். 

கொரானா பரவலை தடுத்திட வேண்டி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளான பால், காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், மருந்து கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 



மேலும், கடைகளில் கூட்டமாக மக்கள் நிற்காமல் 3 அடி தூரத்திற்கு ஒருவராக நின்று பொருட்கள் வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக ஒவ்வொரு கடைகள் முன் கோடுகள் வரையப்பட்டுள்ளன. மேலும் வாகனங்கள் இயக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், பொதுமக்கள் சுதந்திரமாக நடமாடி வந்தனர். மேலும் கடைகளில் விதிமுறைகளை மீறி மக்கள் கூட்டமாக பொருட்களை வாங்கி வந்தனர். 

இதனையடுத்து, வால்பாறை வட்டாட்சியர் ராஜன் கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ், காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். 



அப்போது, சாலைகளில் இருசக்கர வாகனங்கள், கார்களில் சுற்றியவர்களை கண்டித்து திருப்பி அனுப்பினர். வீடுகளுக்கு வெளியே கூட்டமாக நின்றவர்களை வீட்டுக்குள் செல்ல அறிவுறுத்தினர். மேலும், காய்கறி கடைகளில் கூட்டமாக நின்றவர்களை அழைத்து அறிவுரை வழங்கியதோடு கடை உரிமையாளர்கள் விதிகளை கடைபிடிக்காவிட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரித்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...