சொந்த ஊருக்கு செல்ல அனுமதி தாருங்கள்..! கோவை மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்த தனியார் நிறுவன ஊழியர்கள்!

கோவை: சொந்த ஊருக்கு செல்ல அனுமதி தாருங்கள் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் தனியார் நிறுவன ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவை: சொந்த ஊருக்கு செல்ல அனுமதி தாருங்கள் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் தனியார் நிறுவன ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

கோவை சரவணம்பட்டி பகுதியில் இயங்கி வரும் ஸ்டேட் ஸ்டிரீட் ஹெச்.சி.எல் சர்வீஸ் என்ற நிதி நிறுவன மூதலீடு தொடர்பான தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஷிப்ட் முறையில் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் பணியாற்றி வருகின்றார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் பொதுமக்களிடையே உரையாற்றிய பாரத பிரதமர் மோடி கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாநிலங்களில் 144 தடை உத்தரவை செயல்படுத்துமாறு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சரவணம்பட்டி பகுதியில் இயங்கி வரும் இந்த தனியார் நிறுவனம் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரியலாம் என கூறி இருந்தது. இதில் வாடகைக்கு வீடு எடுத்து இருந்தவர்கள் தவிர ஹாஸ்டலில் தங்கி இருந்தவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என தெரிவித்து இருந்தது. இரவு 9 மணிக்கு மேல் மடிக்கணினி வழங்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மாவட்ட எல்லைகள் மூடப்பட்ட நிலையில், சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை என தெரிவித்தனர். அண்டை மாநிலமான பெங்களூரு செல்ல மாவட்ட எல்லை வரை செல்ல அனுமதித்தால் அங்கிருந்து தங்கள் சொந்த ஊருக்கு அங்கிருந்து வரும் வாகனம் மூலம் சென்று விடுவோம் எனவும் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரை சந்தித்து தாங்கள் சொந்த ஊருக்கு செல்ல மாவட்ட எல்லைவரை அனுமதி பெற்று தர வேண்டும் என முறையிட்டனர். ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கை என்பது தேசிய அளவிலான பிரச்சனை என்பதாலும் 144 தடை உத்தரவு உள்ள நிலையில் அனுமதி அளிக்க முடியாது எனவும் பணிபுரியும் இடத்திலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...