கோவை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கோவையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தங்க வழியின்றி தவித்துக் கொண்டிருந்த போலந்து நாட்டு பெண்ணிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டு அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு செல்ல அனுமதி பெற்று தந்தனர்.

போலந்து நாட்டை சேர்ந்த பெண் கடந்த ஜனவரி மாதம் இந்தியா வந்துள்ளார். ஈஷா யோகா மையத்தில் பயிற்சி வகுப்புகள் மேற்கொண்டு வந்த அவர் ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளார்.
இந்த நிலையில், நேற்று மாலை சிங்காநல்லூர் பகுதியில் நின்று கொண்டு இருந்த அவரை சிங்காநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து உள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த வெளிநாட்டு பெண் பயணி கூறுகையில், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈஷா யோகா மையம் மூடப்பட்ட நிலையில் நேற்று முதல் 144 தடை உத்தரவின் காரணமாக தான் தங்கியிருந்த விடுதியில் இருந்து அனுப்பப்பட்டதாக தெரிவித்தார். சொந்த நாட்டிற்கும் செல்ல முடியாத நிலையில் தங்க வழியின்றி இருப்பதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டு அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு செல்ல அனுமதி பெற்று தந்தனர். இதற்கு தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவிப்பதாக போலந்து பெண்மணி தெரிவித்தார்.