ஊரடங்கு உத்தரவை மீறி அலட்சியமாக சாலையில் பயணம் செய்யும் பொதுமக்கள்; அதிருப்தியில் தாக்குதல் நடத்திய போலீசார்!

கோவை: கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனாவசியமாக சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் மீது அதிருப்தியில் போலீசார் தாக்குதல் நடத்தும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோவை: கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனாவசியமாக சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் மீது அதிருப்தியில் போலீசார் தாக்குதல் நடத்தும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கொரோனா வைரசின் தாக்கத்தினால் உலகம் முழுவதும் 19 ஆயிரத்து 101 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இந்த உயிரிழப்புகளையும் இதன் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் பொருட்டு இந்தியாவில் பொதுமக்கள் நடமாட்டத்தை குறைக்க மத்திய அரசு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால், இந்த தடையை மீறி பொது மக்கள் அலட்சியமாக சாலைகளில் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் தொடர்ந்து பொதுமக்களுக்கு அமைதியான முறையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது தொடரும் அலட்சியங்களை கட்டுப்படுத்த அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் 144 தடை உத்தரவை மீறி சாலையில் பயணித்த 42 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதே சமயத்தில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் போலீசார் அத்துமீறி பயணம் மேற்கொள்ளும் நபர்கள் மீது தடியடி மற்றும் நூதன தண்டனைகளை வழங்கி வருகின்றனர். இருப்பினும் பொது மக்களின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், கோவை மாநகர மாவட்ட காவல்துறையினர் பொதுமக்கள் சாலையில் நடமாட்டத்தை குறைக்க வேண்டும் என விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகள் வழங்கி வாகனங்களில் வந்து கொண்டிருந்தனர்.

இதில் தொடர் அலட்சியங்களை கண்ட போலீசார், தற்போது அத்துமீறி பயணம் மேற்கொள்ளும் நபர்கள் மீது தடியால் தாக்கும் நிலையை கையில் எடுத்துள்ளனர்.

இப்படி கோவை தடாகம் சாலையில் அத்துமீறி பயணம் செய்த இரண்டு இளைஞர்களை விசாரித்து கொண்டிருந்த போலீசார் திடீரென தான் வைத்திருந்த தடியால் அவர்களைத் தாக்கி அந்தப் பகுதியை விட்டு அப்புறப்படுத்தினர்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது;-

நோய் பரவாமல் இருக்க காவல் துறையினர் தங்கள் குடும்பத்தை மறந்து பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றி வருகின்றனர். ஆனால், பொதுமக்கள் இப்படி அலட்சியம் காட்டும் பொழுது இது அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

மக்கள் நலனுக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஒருசிலர் மீறும் பொழுது சில நடவடிக்கைகள் வழியாகத்தான் திருத்த வேண்டியதாக உள்ளது என தெரிவித்தார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...