கோவை: கோவை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை மாநகராட்சி, பிரதான அலுவலக வளாகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், ஏ.சண்முகம், வி.சி.ஆறுக்குட்டி அவர்கள், வி.பி.கந்தசாமி, மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும் சிறிய மோட்டார் பொருத்திய கிருமி நாசினி தெளிப்பான் கருவிகள் 50 வீதம் 250 கருவிகளும், சிறிய ஆளில்லா விமானம் கருவி மூலம் மருந்து தெளிக்கும் மாதிரி செயல் விளக்கத்தையும், மண்டலத்திற்கு 1 வாகனம் வீதம் 5 வாகனங்களில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரப் பணிகளும், 1000 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் பொருத்திய 25 வாகனங்களின் பணிகளையும், தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு கையுறை, முககவசம் ஆகிய உபகரணங்கள் வழங்கும் பணிகளையும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆப்வு செய்தார்.
மேலும், வருவாய் நிர்வாகம் பேரிடர் மேலாண்மைத்துறை வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் சார்பாக சமுதாய உணவுக்கூடம் அமைக்கப்பட்டு தினமும் காலை மற்றும் மதியம் 500 பேருக்கான உணவு தயாரிக்கப்பட்டு வழங்கி வருகின்றது.

இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகளின் தரம் குறித்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், நகர் நல அலுவலர் கே.சந்தோஷ்குமார் அவர்கள், உதவி ஆணையர்கள் மண்டல உதவி ஆணையர்கள் தி.ர.ரவி(தெற்கு), செந்தில்குமார் ரத்தினம்(வடக்கு), மகேஷ்கனகராஜ் (மத்தியம்) ம.செல்வன் (கிழக்கு), ஏ.ஜே.செந்தில் அரசன்(Come), மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், செயற்பொறியாளர்கள் சரவணக்குமார், ஞானவேல், ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.