கோவை: தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக திருப்பூரைச் சேர்ந்த பிரபல பனியன் கம்பெனி உரிமையாளரின் மருமகன் கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த பிரபல டி.எஸ்.பி பனியன் கம்பெனி உரிமையாளரின் மருமகன் சூரியபிரகாஷ். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் தொழில் நஷ்டம் காரணமாக பெங்களூர் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு கோவை வந்த அவர் கோவை அவிநாசி சாலையில் உள்ள ரெசிடன்சி ஹோட்டலில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு திடீரென ஆறாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் கோவை பந்தயச்சாலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.