மேட்டுப்பாளையத்தில் காலில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினர்!

கோவை: மேட்டுப்பாளையத்தில் காலில் காயம் ஏற்பட்டு உடல் நலக் குறைவாக இருந்த ஆண் காட்டு யானைக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

கோவை: மேட்டுப்பாளையத்தில் காலில் காயம் ஏற்பட்டு உடல் நலக் குறைவாக இருந்த ஆண் காட்டு யானைக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட நெல்லித்துறை காப்பு காட்டிற்குள் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை ஆண் காட்டுயானை காலில் காயத்துடன் ஆற்றுப் பகுதியில் சுற்றியுள்ளது

இதனை கண்ட அந்த பகுதி மலைவாழ் மக்கள், உடல்நல பாதிப்புடன் சுற்றி திரிந்த ஆண் யானை குறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையில் அங்கு சென்ற வனத்துறையினர் இரண்டு குழுக்களாக பிரிந்து யானையைத் தேடி கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். 



கால்நடை மருத்துவக் குழுவின் ஆலோசனைப்படி, யானை விரும்பி உண்ணக்கூடிய பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களில், சிகிச்சைக்குத் தேவையான மருந்து மாத்திரைகளை கலந்து கொடுத்து, யானை அவற்றை உணவாக உன்னும் வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டது

அடர்ந்த வனப்பகுதியில் எளிதாக சென்று அடைய இயலாத தூரத்தில் யானை இருந்தும் வனத்துறையினர் அந்த யானையை கண்டுபிடித்து சிகிச்சை அளித்தனர். கொரானா தடுப்பு தடை உள்ள இந்த இக்கட்டான நேரத்திலும், மேட்டுப்பாளையம் வனத்துறையினர் யானையை கண்காணித்து சிகிச்சை அளிக்கும் பணியில் இரண்டு குழுக்களாக சுழற்சி முறையில் பணி புரிந்து வருகின்றனர். மேலும், ஒரு குழுவினர் அவற்றிற்கான உணவுகள் தயாரித்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...