திருப்பூர் அருகே வேஸ்ட் குடோனில் திடீர் தீ விபத்து; தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்

திருப்பூர்: திருப்பூரில் உள்ள வேஸ்ட் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் உள்ள வேஸ்ட் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

திருப்பூர் ஆலங்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் அமலராஜ் (52). இந்த வேஸ்ட் குடோனில், டையிங் நிறுவனங்களில் இருந்து சேகரித்து வரப்படும் பிளாஸ்டிக் கேன்கள் குடோனில் ஒரு பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது மேலும், பிளாஸ்டிக் வேஸ்டுகள், இரும்பு பொருட்கள் இருந்துள்ளது.

இந்நிலையில், குடோனில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் 6 மணிக்கு மேல் குடோனை பூட்டிவிட்டுச் சென்ற நிலையில் குடோனில் இருந்து புகைமூட்டம் வருவதைக் கண்ட அப்பகுதியினர் சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.



ஆனால், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தீயானது மளமளவென கொழுந்து விட்டு எரிய துவங்கியது. இந்த புகைமூட்டமானது இரண்டு கிலோமீட்டர் வரை சென்றது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், பொதுமக்களுடன் இணைந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர். கெமிக்கல் நிறுவனங்களிலிருந்து எடுத்து வரப்படும் கேன்களில் ஒரு சிலவற்றில், ரசாயனங்கள் தேங்கியிருந்ததாலேயே தீயானது உடனடியாக கொழுந்து விட்டு எரியத் துவங்கியதாக கூறப்படுகிறது.

இதனிடையே, மர்ம நபர்கள் யாரேனும் தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டார்களா? அல்லது மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...