திருப்பூர்: திருப்பூரில் 172 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக 144 தடை உத்தரவு அமலுக்கு பின்பு திருப்பூரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: திருப்பூரில் 172 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக 144 தடை உத்தரவு அமலுக்கு பின்பு திருப்பூரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலானதை அடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் , பெருமாநல்லூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பூரில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள சூழ்நிலையில் உணவு கிடைக்காதவர்களுக்கு பொது சமையலறை உருவாக்க மாநகராட்சியுடன் ஆலோசித்து வருவதாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருப்பூர் மாவட்டத்தில் ஐந்து குழுக்கள் உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
மேலும், இதுவரை வெளிநாடு சென்று வந்தவர்கள் அவர்களுடைய குடும்பத்தாருடன் 172 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதோடு, லண்டன் சென்று திரும்பிய ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் . மேலும், கொரோனா குறித்த தேவையற்ற வதந்திகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.