கோவை: கொரோனா அறிகுறிகளையடுத்து கோவையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 314 பேரை கண்காணிக்க ஊர்காவல் படையினர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதையடுத்து அரசின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல அறிகுறிகளுடன் வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களை சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்படி தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கோவையில் இப்படி மொத்தம் 314 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், இவர்களின் நலம் குறித்து தொடர்ச்சியாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ரமேஷ் குமார் அவர்களின் மேற்பார்வையில்
வீடியோ கால்கள் மூலம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல கொரோனா தொற்று உள்ள வீட்டு நுழைவாயிலில் உள்ளே வர வேண்டாம் என ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டுள்ளன. இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக சுகாதாரத் துறை அதிகாரிகளின் கோரிக்கைக்கிணங்க கண்காணிப்பு வளையத்தில் உள்ள வீடுகளில் ஊர்க்காவல் படையினர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையைப் பொருத்தவரை 314 நபர்களின் வீடுகளில் ஊர்க்காவல் படையினர் கண்காணிப்பில் ஈடுபடுவர், என தகவல் வெளியாகியுள்ளது.