கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் நாடு பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக நாட்டு மக்களுக்காக உரையாற்றி வருகிறார் பிரதமர் மோடி.
அந்த உரையில் தெரிவித்ததாவது,
அடுத்த 21 நாட்கள் நமக்கு மிகவும் முக்கியமானது. கொரோனா வைரஸ் நம்மைத் தாக்காது என யாரும் நினைக்கக் கூடாது. அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. நாட்டு மக்கள் அனைவரும் ஊரடங்குக்கு ஒத்துழைக்க வேண்டும். மருத்துவர்கள் தவிர யாருக்கும் ஊரடங்கின்போது அனுமதியில்லை" என்று தெரிவித்தார்.