கொரோனா பாதிப்பு எதிரொலி: கோவை மத்திய சிறையில் இருந்த கைதிகள் 153 பேர் ஜாமினில் விடுவிப்பு!

கோவை: கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கூட்டத்தை குறைக்கும் பொருட்டு கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளில் 153 பேர் ஜாமினில் விடப்பட்டுள்ளனர்.

கோவை: கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கூட்டத்தை குறைக்கும் பொருட்டு கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளில் 153 பேர் ஜாமினில் விடப்பட்டுள்ளனர்.



கோவை மத்திய சிறையில் பெண்கள் ஆண்கள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா பாதிப்பு எதிரொலியாக தமிழக அரசின் உத்தரவின்படி சிறைத்துறை நிர்வாகம் 5 பெண் கைதிகள் உட்பட 153 கைதிகளை ஜாமீனில் விடுவித்துள்ளது. 

மேலும், இந்த நடவடிக்கையானது கூட்டத்தை குறைக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல, இனி திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் கோவை மத்திய சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்படுவார்கள்.

இது குறித்து சிறைத்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் கூறும்போது;-

இந்த வைரஸ் பாதிப்பு நிமித்தம் கைதிகள் பிணையில் விடப்பட்டு வருகின்றனர். அதேபோல, சிறையில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவ வசதிகளுடன் தூய்மை குறித்து கைதிகளுக்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும், கைதிகள் தாங்கள் அணிந்து கொள்வதற்காகவும் கோவை அரசு மருத்துவமனைக்கு வழங்கவும் முக கவசங்களை தயாரித்து வருவதாக தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...