கோவை: கோவையில் சிறு, குறுந்தொழில் கூடங்கள் மூடப்பட உள்ள நிலையில் வங்கிக்கடன், ஜிஎஸ்டி, வருமான வரி உள்ளிட்டவை கட்டுவதற்கு 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டுமென தொழில் அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, இன்று மாலை முதல் 144 தடை அமலாக உள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள சிறு, குறுந்தொழில் கூடங்கள் 31ம் தேதி வரை மூடப்படுகின்றன.

இதனிடையே கொடிசியா, டேக்ட், கோப்மா உள்ளிட்ட 13 தொழில் அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், கோவையில் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் கூடங்கள் 31 ம் தேதி மூடப்படுவதாகவும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஜீன் மாதம் வரை தொழிற்கூடங்கள் மூடல் நீடிக்க வாய்ப்பிருப்பதாகவும் தொழில் அமைப்பினர் தெரிவித்தனர்.

ஏற்கனவே பொருளாதார மந்தநிலை காரணமாக தொழில்கள் நலிவடைந்துள்ள நிலையில் கொரோனா மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் வங்கிக்கடன், ஜிஎஸ்டி,வருமான வரி உள்ளிட்டவை கட்ட 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் இதேபோல மின் கட்டணம் செலுத்தவும் கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தொழில் அமைப்பினர் வலியுறுத்தினர்.