கொரோனா தடுப்புப் பணியில் உள்ள மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம், சிறப்பூதியமாக வழங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: கொரோனா தடுப்புப் பணியில் உள்ள மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம், சிறப்பூதியமாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


சென்னை: கொரோனா தடுப்புப் பணியில் உள்ள மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம், சிறப்பூதியமாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

உலகம்‌ முழுவதும்‌ கொரோனா வைரஸால்‌ பாதிக்கப்பட்டோரின்‌ எண்ணிக்கை 3 லட்சத்து 860 ஆயிரமாக அதிகரித்துள்ளது. சுமார்‌ 16 ஆயிரத்து 500 பேர்‌ கொரோனா வைரஸ்‌ தாக்கதால்‌ உயிரிழந்துள்ளனர்‌. உலகையே அச்சுறுத்திய கொரோனா தற்போது இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது.

இந்தியாவில்‌ சுமார்‌ 500 பேர்‌ கொரோனாவால்‌ பாதிக்கப்பட்டிருக்கும்‌ நிலையில்‌ 10 உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில்‌, நாடு முழுவதும்‌ கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்‌ தீவிரமாக நடைபெற்று வருகிறது. மருத்துவ மற்றும்‌ தூய்மை பணியாளர்கள்‌ தன்னலம்‌ பாராது 24 மணிநேரமும்‌ பணியாற்றி வருகிறார்கள்‌.

இந்த நிலையில், கொரோனா தடுப்புப்‌ பணியில்‌ உள்ள மருத்துவர்கள்‌, சுகாதாரப்‌ பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம்‌, சிறப்பூதியமாக வழங்கப்படும்‌ என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்‌.

மேலும், சுகாதார பணியாளர்களுக்கு சட்டப்பேரவையில்‌ கைதட்டி முதலமைச்சர்‌ உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்‌ பாராட்டுக்களை தெரிவித்தனர்‌.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...