கோவை: மேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு செல்லும் சாலை இரு வழிச்சாலையாக இருந்த நிலையில் அதனை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி துவங்கி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முடிக்கப்பட்டது.
அதன் பின்னர் சாலையின் நடுவே சென்டர் மீடியன் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை வைக்கப்படவில்லை. இதனால் கடந்த இரு மாதங்களாக இந்த சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு என்பது தொடர்கிறது.
இந்த நிலையில், காரமடை குட்டையூர் பகுதியை சேர்ந்தவர் நவீன் என்பவரது மனைவி திலகாமணி(38). இவர் இன்று மேட்டுப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டுக்கு மீண்டும் கோவை காரமடை சாலையில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, குட்டையூர் பகுதிக்கு அருகே வந்த போது மேட்டுப்பாளையத்தில் இருந்து வந்த சொகுசு கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் பின் பகுதியின் மீது பயங்கரமாக மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த திலகாமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காரமடை போலீசார், அவரது உடலை கைப்பற்றி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், போலீசார் விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய கார் காளியப்பனூர் பகுதியை சேர்ந்த காளிசாமி என்பவர் ஓட்டி வந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.