கோவை: கோவையில் வசித்து வரும் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் நெரிசலில் அவதிப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில் அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இந்த நோயானது பரவாமல் இருக்க பொதுமக்கள் இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்படியிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் வரும் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது .
இதனால் கோவை மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் பொதுமக்கள்
தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.
இதில் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் தென் மாவட்டங்களான தேனி, மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல் ,விருதுநகர் போன்ற ஊர்களுக்கு செல்ல பொதுமக்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது.
ஆனால் இந்த கூட்டங்களுக்கு ஏற்ப போதிய பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் அலைமோதியபடி பேருந்துக்களுக்காக காத்திருக்கின்றனர்.