கொரோனா எச்சரிக்கையை மீறி கூடலூரில் வெளிமாநில நபர்களை தங்க வைத்த விடுதிகளுக்கு சீல் வைப்பு

நீலகிரி: கொரோனா வைரஸ் பரவுவதலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கையை நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், நீலகிரியில் மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கையையும் மீறி வெளிமாநில நபர்களை தங்க வைத்திருந்த இரண்டு விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது .

நீலகிரி: கொரோனா வைரஸ் பரவுவதலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கையை நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், நீலகிரியில் மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கையையும் மீறி வெளிமாநில நபர்களை தங்க வைத்திருந்த இரண்டு விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது .

நீலகிரி மாவட்டம் தமிழக எல்லை பகுதியாகவும் கேரளா கர்நாடகா மாநிலங்களை ஒட்டியும் அமைந்துள்ளது. கொரோனா பரவுவதலை தடுக்கும் விதமாக மாநில எல்லைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் மாவட்ட எல்லையில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளும் மூடப்பட்டு வெளிமாநில வாகனங்கள் உள்ளே வர அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் இப்பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் லாட்ஜ்கள் ஹோட்டல்களில் வெளி நபர்களை தங்க வைக்க கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகள் முறையாக செயல்படுகிறதா ? என்பதனை இன்று கூடலூர் ஆர்டிஓ ராஜ்குமார் நகராட்சி ஆணையர் பாஸ்கர் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஆய்வு நடத்தினர்.



அப்போது கூடலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவையும் மீறி வெளி மாநிலம் மற்றும் வெளிமாவட்ட நபர்களை தங்கவைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு அந்த தங்கும் விடுதிகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். 

காெரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடரும் வரை இப்பகுதிகளில் உள்ள லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகள் ஹோட்டல்களில் வெளிமாநில நபர்களை அனுமதிக்கக் கூடாது என்றும், தங்களது சோதனை நடவடிக்கைகள் மேலும் தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...