மளிகை கடைகள் மார்ச் 31ம் தேதி வரை வழக்கம் போல் திறந்திருக்கும் - செந்தில் நடராஜன், கோவை பழமுதிர் நிலைய நிர்வாக இயக்குனர்

கோவை: பால், மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடைகள் வரும் மார்ச் 31ம் தேதி வரை வழக்கம் போல் திறந்திருக்கும் என கோவை பழமுதிர் நிலையத்தின் நிர்வாக இயக்குனர் செந்தில் நடராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை: பால், மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடைகள் வரும் மார்ச் 31ம் தேதி வரை வழக்கம் போல் திறந்திருக்கும் என கோவை பழமுதிர் நிலையத்தின் நிர்வாக இயக்குனர் செந்தில் நடராஜன் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூடவும், 144 தடை உத்தரவையும் பிறப்பித்து சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள சூழ்நிலையை பயன்படுத்தி மளிகை, உணவுப் பொருட்கள் விற்கும் கடைகளை அடைப்பதாகவும், அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பதாகவும் தகவல்கள் வெளியானது.

மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடைகளை அடைப்பதாக கிளம்பிய வதந்தியால் நகரம் முழுவதும் மளிகைக் கடைகளில் நீண்ட வரிசையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றன. ஊரடங்கு உத்தரவின் போது என்ன சேவைகள் கிடைக்கும் என்பது குறித்த விழிப்புணர்வு இல்லாதது இதற்கு முக்கிய காரணமாகும்.

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கோவை பழமுதிர் நிலையத்தின் நிர்வாக இயக்குனர் செந்தில் நடராஜன் அணுகிய போது அவர் கூறுகையில், இந்த ஊரடங்கு காலம் முழுவதும் மளிகை கடைகள் மற்றும் அனைத்து அத்தியாவசிய சேவைகளும் கிடைக்கும். இந்த நேரத்தில் எங்கள் கிளைகள் அனைத்தும் திறந்திருக்கும், இந்த ஊரடங்கு உத்தரவு ஏன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

இந்த அறிக்கையின் மூலம், மளிகைப் பொருட்கள், பால், இறைச்சி, காய்கறிகள், மருத்துவம், மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற அனைத்து அவசர சேவைகளும் வழக்கம் போல் கிடைக்கும் என்பதை கோவை மக்களுக்கு சிம்பிளிசிட்டியைச் சேர்ந்த குழு தெரிவிக்க விரும்புகிறது.

இந்த ஊரடங்கு உத்தரவில் நான்கிற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றுகூட கூடாது, சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் நடமாடக் கூடாது. அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, கார்கள், ஆட்டோ, டாக்ஸி போன்றவை இயங்காது. மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் ஆன போக்குவரத்து அத்தியாவசிய இயக்கத்திற்கு தவிர மற்ற இயக்கம் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், தனிப்பட்ட வாகனங்களின் பயன்பாடு அவசர காலங்களில் பயன்படுத்தவும் அத்தியாவசிய சேவைகளுக்காக அணுகவும் அனுமதிக்கப்படுகிறது. இந்த தொற்று வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மக்கள் பீதியடையாமல் வீட்டிற்குள் இருக்க வேண்டும்.

இந்த ஊரடங்கு உத்தரவைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் அல்லது அவசரகால சேவைகள் என்னவென்பது குறித்த விவரங்கள் அல்லது மருத்துவமனைகளில் சோதனைகளை திட்டமிட வேண்டுமென்றால், தயவுசெய்து எங்களை + 91-95858-55577 என்ற எண்ணில் அழைக்கவோ அல்லது வாட்ஸ்அப் செய்யவோ தயங்க வேண்டாம். 

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...