கொரோனா எதிரொலி: வரும் 31ம் தேதி வரை கோவையில் உள்ள சிறு, குறு மோட்டார் பம்புசெட் தொழிற்சாலைகள் மூடப்படும் என அறிவிப்பு

கோவை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மோட்டார் பம்புசெட் தொழிற்சாலைகள் நாளை முதல் 31ம் தேதி வரை உற்பத்தியை நிறுத்தி தொழிற்கூடங்கள் மூடப்படும் என கோவை பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கோவை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மோட்டார் பம்புசெட் தொழிற்சாலைகள் நாளை முதல் 31ம் தேதி வரை உற்பத்தியை நிறுத்தி தொழிற்கூடங்கள் மூடப்படும் என கோவை பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசின் சார்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்‌ பரவுவதைத் தடுக்கும்‌ நோக்கில்‌ பொது இடங்களில்‌ கூடக்கூடாது, திரையரங்குகள்‌, வணிக வளாகங்கள்‌ மற்றும்‌ கல்வி நிறுவனங்களை மார்ச்‌ 31ம்‌ தேதிவரை மூடவேண்டும்‌ என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேபோல, நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூடவும், 144 தடை உத்தரவையும் பிறப்பித்து சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மோட்டார் பம்புசெட் தொழிற்சாலைகள் நாளை முதல் 31ம் தேதி வரை உற்பத்தியை நிறுத்தி தொழிற்கூடங்கள் மூடப்படும் என கோவை பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மோட்டார் பம்புசெட் நிறுவனங்களும், அதைச் சார்ந்து (ஜாப் வொர்க்) இயங்கும் 15 ஆயிரம் தொழிற்கூடங்களும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...