திருப்பூர்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் மார்ச் 31ம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் இயங்காது என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசின் சார்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் பொது இடங்களில் கூடக்கூடாது, திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை மார்ச் 31ம் தேதிவரை மூடவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் இன்று திருப்பூர் பின்னலாடை நிறுவன சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக பின்னலாடை ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.