சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக கூடுதலாக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தனிமைப்படுத்துதல் அவசியம் என்பதால், நோய் பாதித்த நபர்கள் உள்ள மாவட்டங்களில் சில கடுமையான நடவடிக்கைகளை தற்போது மேற்கொள்வது அவசியமாகிறது என்று தடை உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிக்கும், பெரிய தனியார் மருத்துவமனைகளில் ஏற்கனவே இருக்கும் படுக்கை வசதிகளில் 750 படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகளாக மாற்ற அறிவுறுத்தி இருப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டார். மேலும் தேவையான மருந்துகளும், மருத்துவ கருவிகளும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
கொரோனா பாதிப்பு இருந்தால், அதனை தெரிவித்து, தனிமைப்படுத்திக் கொள்ளாவிடில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்த முதலமைச்சர் பழனிசாமி, தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனா மிகப்பெரிய நோய் என்று குறிப்பிட்டார். அதனை சவாலாக எடுத்துக் கொண்டு முழுமையாக ஒழிப்போம் என்றார்.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஏற்கனவே ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது மேலும், தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பிரதமரின் உத்தரவு தமிழகத்தில் முழுமையாக பின்பற்றப்பட்டது என்று பெருமிதம் தெரிவித்த அவர், ஒத்துழைப்பு தந்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அரசின் நடவடிக்கை வெளிப்படையாக உள்ளபோதும், எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடரை புறக்கணித்ததன் காரணம் தெரியவில்லை என்றும் முதலமைச்சர் சாடினார்.
மேலும், அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, மகிழுந்துகள், ஆட்டோ, டாக்ஸி போன்றவை இயங்காது எனவும் மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் ஆன போக்குவரத்து அத்தியாவசிய இயக்கத்திற்கு தவிர மற்ற இயக்கம் முற்றிலும் தடை செய்யப்படுவதாக கூறினார்.
அதேசமயம், அத்தியாவசியப் பொருட்களுக்கான, பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் போன்றவை தவிர அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும் இயங்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.