திருப்பூர்: திருப்பூர் அருகே இரண்டாக வெட்டப்பட்டு எரிந்த நிலையில் இளம் பெண் சடலமாக மீட்ட போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்குட்பட்ட கரைப்புதூர் பகுதியில் இன்று காலை சாலையோரத்தில் தீ எரிந்து கொண்டிருப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி அணைத்த போது அங்கே பெண் எரிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, உடனடியாக காவல்துறைக்குத் தகவல் அளித்ததை அடுத்து போலீசார் வந்து பார்த்தபோது, பெண் சடலம் இரண்டாக வெட்டப்பட்ட நிலையில் எரியூட்டப்பட்டது தெரியவந்தது.

உடனடியாக கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் டெவில் ஆகியவை கொண்டு வரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
உடல் முழுவதுமாக எரிக்கப்பட்டதால் அடையாளம் தெரியாத நிலையில், முதற்கட்ட பிரேத பரிசோதனை விசாரணையில் 26 வயதுடைய இளம் பெண்ணாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து, போலீசார் இறந்த பெண் யார்? அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.