கோவையில் கட்டாய ஊரடங்கு தேவையில்லை; மக்கள் அதிகளவில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

கோவை: கோவையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வரும் மார்ச் 31ம் தேதி வரை மக்கள் அதிகளவில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கட்டாய ஊரடங்கு தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.

கோவை: கோவையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வரும் மார்ச் 31ம் தேதி வரை மக்கள் அதிகளவில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கட்டாய ஊரடங்கு தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசின் சார்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பரிசோதனையானது சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் வைத்து பரிசோதிக்கப்பட்டு வந்தது.

இது வீணான கால விரயத்தை ஏற்படுத்துவதால், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தமிழகம் முழுவதும் பரிசோதனை முகாம்களை துவங்க உள்ளதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் புதிதாக கொரோனா பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு மற்றும் தூய்மை பணிகளை கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி இன்று நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கோவையில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என சுய ஊரடங்கிற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதற்கு பொதுமக்கள் 100 சதவீதம் ஒத்துழைப்பு அளித்து பெரும் ஆதரவு அளித்துள்ளதாகவும் கோவையில் கட்டாய ஊரடங்கு தேவையில்லை என தெரிவித்தார்.

அதேபோல, கோவையில் இருந்து வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்கள் சென்று திரும்பியவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என கூறினார்.

மேலும், கோவையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வரும் மார்ச் 31ம் தேதி வரை மக்கள் அதிகளவில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...