திருப்பூர்: ரயில் மூலம் பீகாரில் இருந்து திருப்பூர் வந்த வடமாநில இளைஞர்களுக்கு ரயில்வே நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உடல் வெப்பநிலை அதிகமாக இருந்த 7 பேர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன் பீகார் மாநிலத்தில் இருந்து கிளம்பி கேரளா சென்று கொண்டிருந்த ரயில் மூலம் திருப்பூர் வந்திறங்கிய 100க்கும் மேற்பட்ட ரயில் பயணிகளிடம் கொரோனா அறிகுறி குறித்த சோதனை நடத்தப்பட்டது.

இதில் உடல் வெப்பநிலை நூறு சதவீதத்திற்கும் அதிகமாக இருந்த பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும், முதற்கட்ட சோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு அவர்களின் முழு விவரங்களும் சேகரிக்கப்பட்டன.