கோவையில் மக்கள் ஊரடங்கால் உணவின்றி தவித்த ஆதரவற்றவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்த மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் பாராட்டு!

கோவை: மக்கள் ஊரடங்கால் உணவு வசதிகள் இன்றி தவித்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்தோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு சாலையில் சென்று கொண்டிருந்த கோவை மாவட்ட ஆட்சியர் திடீரென வாகனத்தை நிறுத்தி உணவு ஏற்பாடுகள் செய்து கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: மக்கள் ஊரடங்கால் உணவு வசதிகள் இன்றி தவித்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்தோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு சாலையில் சென்று கொண்டிருந்த கோவை மாவட்ட ஆட்சியர் திடீரென வாகனத்தை நிறுத்தி உணவு ஏற்பாடுகள் செய்து கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கோவையில் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மக்கள் நலன்களை தாமாக முன்வந்து செய்து வருகிறார். அதேபோல, ஏழை எளியவர்கள், முதியவர்கள், ஆதரவற்றவர்கள் என அவரின் கவனம் மற்ற ஆட்சியர்களை விட மேலோங்கி நிற்பதாக பொதுமக்கள் மத்தியில் தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகிறது.



இந்நிலையில், கோவையில் ஊரடங்கு உத்தரவால் ஆதரவற்றவர்கள், மற்றும் வடமாநில பயணிகள் உணவு வசதிகள் இன்றியும் தண்ணீர் இன்றியும் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று தனது பணி நிமித்தம் காரணமாக கோவை ரயில் நிலையம் வழியாக சென்று கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் தனது வாகனத்தை நிறுத்தி செய்தியாளர்கள் மூலம் அவர்களுக்கு தேவையான உதவிகளை கேட்டறிந்தார். 



பிறகு, அவர்களுக்கு தனது அலுவலகத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வர உத்தரவிட்டார். 



மேலும், சில நல் உள்ளங்களின் உதவியோடு அவர்களுக்கு உணவும் ஏற்பாடும் செய்யப்பட்டது. முக்கியமாக, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மாநகராட்சி மண்டபம் மற்றும் சி.எஸ்.ஐ மண்டபங்களில் இன்று இரவு தங்குவதற்கும் ஏற்பாடு செய்தும் உத்தரவிட்டார்.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...