கோவை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பாரத பிரதமரின் சுய ஊரடங்கில் பங்கேற்று மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளதால் கோவையில் முக்கிய சாலைகள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது இத்தாலியில் அதிகளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனால், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமலிருக்க மக்கள் அதிகமாக கூட்டம் கூடும் இடங்களான விமான நிலையம், பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடத்தப்பட்டு சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறியுடன் இருப்பவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணியும் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, நிறுவனங்களில் பணி புரிவோர் வீட்டிலிருந்தே பணிபுரியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கேரளா மற்றும் மகாராட்ஷ்ரா மாநிலத்தில் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக பலர் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைத்து விமானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டதோடு, ரயில்களும் குறைந்த அளவே இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. தமிழக அரசு கேரள, கர்நாடகம் மற்றும் ஆந்திரா மாநில எல்லைகளை மூடவும் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, பாரத பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 22ம் தேதியான இன்று நாட்டு மக்கள் அனைவரும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனைவரும் தங்களை தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் சுய ஊரடங்கில் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, இன்று பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவும் சங்கிலி தொடர் தடுக்கப்படும் எனவும் இந்த சுய ஊரடங்கில் தாங்களே முன்வந்து அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தெரிவித்து பங்கேற்றுள்ளனர். குறிப்பாக ஆட்டோ ஓட்டுனர்கள், டாக்சி ஓட்டுனர்கள், வணிகர்கள், மளிகைகடை வியாபாரிகள், பால் முகவர்கள், உணவு விடுதிகள், தொழிற்துறையினர் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்து அனைத்து கடைகள் வணிக நிறுவனங்கள் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கோவையில் அதிகமாக மக்கள் கூட்டம் கூடுமிடங்களான உக்கடம், காந்திபுரம், சாய்பாபா காலனி பேருந்து நிலையங்கள் மக்கள் கூட்டமின்றி காணப்பட்டதுடன் முக்கிய சாலைகளான கிராஸ்கட் சாலை, காந்திபுரம், அவினாசி சாலை, டவுன்ஹால் போன்ற பகுதிகளில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. அனைத்து கோவில்கள், மசூதி, தேவாலயங்கள் அனைத்தும் மூடப்பட்டது.

ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டமின்றி காணப்பட்டது.

மேலும், இந்த சுய ஊரடங்கால் அனைத்து தரப்பு மக்களும் தங்களது வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அத்தியாவசிய பொருட்களான பால், மருந்து கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்று வரும் சுய ஊரடங்கில் மக்கள் அனைவரும் தாமாகவே சுய ஊரடங்கை ஏற்படுத்திக்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.