வால்பாறையில் மக்கள் ஊரடங்கை முன்னிட்டு வெறிச்சோடிய சாலைகள்..!

கோவை: வால்பாறையில் கொரானா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி விடுத்த சுய ஊரடங்கை முன்னிட்டு வால்பாறையிலுள்ள அனைத்து கடைகள் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

கோவை: வால்பாறையில் கொரானா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி விடுத்த சுய ஊரடங்கை முன்னிட்டு வால்பாறையிலுள்ள அனைத்து கடைகள் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.



ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவில், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் மூடப்பட்டுள்ளன. அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் ஆட்டோக்கள், ஆம்னிவேன்கள் மற்றும் லாரிகள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக நகரின் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. 

மேலும், மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். 



வால்பாறை காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 



நகராட்சி சிறப்பு தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றுதல் மற்றும் கிருமி நாசினி மருந்து அடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



இதேபோல, நீலகிரி மாவட்டத்தில் காெராேனாவை கட்டுப்படுத்த பிரதமர் அறிவித்த சுய ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து உதகை, குன்னூர், காேத்தகிரி பாேன்ற பகுதிகளில் காலை 7 மணிக்கு முன்பாக தினசரி நாளிதழ், பால், நடை பயிற்சி உள்ளிட்டவற்றை முடித்துக் கொண்டு பெரும்பாலானவர்கள் வீடு திரும்பினர். 



இதன் காரணமாக பேருந்து நிலையம் கார், ஆட்டாே ஸ்டேண்ட், ரயில் நிலையம் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகள் வெறிச்சாேடி காணப்படுகிறது.



Newsletter

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...