மேட்டுப்பாளையம் அருகே பெள்ளாதி வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு; இருவர் கைது

கோவை: மேட்டுப்பாளையம் அருகே பெள்ளாதி வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே பெள்ளாதி வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதியில் வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் தலைவராக இருந்தவர் முருகையன் மற்றும் அதே வங்கியில் மனோகரன் என்பவர் செயலாளராக பணியாற்றி வந்தார். 

இந்த வங்கியில் பெள்ளாதி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடன் பெறுவது மற்றும் சேமிப்பு கணக்கு நகைக்கடன் போன்றவை வைத்து பராமரித்து வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்த வங்கியில் பல லட்சம் ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகப் பொதுமக்கள் மற்றும் உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

அடகு வைக்கப்பட்ட நகை மற்றும் சேமிப்பு டெபாசிட் ஆகியவற்றில் முறைகேட்டில் சங்கத்தின் தலைவர் முருகையன் மற்றும் செயலாளர் மனோகரன் ஆகியோர் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனை கூட்டுறவு சங்கத்தின் தனிக்கை குழு ஆய்வு நடத்தி விசாரணை நடத்திவந்தது. 

இதையடுத்து, விசாரணையில் ஊழல் நடந்தது உறுதி செய்யப்பட்டதால் தற்போது சங்கத்தின் தலைவர் முருகையன், செயலாளர் மனோகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கூட்டுறவுத்துறை சார்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...