மகாராஷ்டிராவில் இருந்து ரயில் மூலம் கோவை வந்த 10 இளைஞர்களுக்கு காய்ச்சல்; பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு

கோவை: ரயில் மூலம் மகாராஷ்டிராவில் இருந்து கோவை வந்த 10 இளைஞர்கள் கொரோனா அறிகுறியுடன் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.


கோவை: ரயில் மூலம் மகாராஷ்டிராவில் இருந்து கோவை வந்த 10 இளைஞர்கள் கொரோனா அறிகுறியுடன் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

மகாராஷ்டிராவில் இருந்து கோவை வந்திறங்கிய 10 இளைஞர்களுக்கு ரயில் நிலையத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் எழுந்த சந்தேகத்தில் கொரோனா பரிசோதனை செய்ய கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

கோவை ரயில் நிலையத்திற்கு தினமும் 70ற்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இதில் சாதாரண நாட்களில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பயணிகளும் சனி, ஞாயிறு மற்றும் விழா நாட்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளும் வருகின்றனர்.

இதனிடையே, உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கோவை ரயில் நிலையத்தில் வரும் பயணிகளுக்கு வைரஸ் அறிகுறிகள் உள்ளதா என்பது தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கோவை ரயில்வே நிலையத்தில் கொரோனா கண்காணிப்பை சுகாதாரத் துறையினரும் மருத்துவ குழுவினரும் ரயில்வே போலீசாரும் இணைந்து செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று பெங்களூர்-எர்ணாகுளம் இரயிலில் கோவை வந்த 10 மஹாராஷ்டிரா இளைஞர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது.

இந்தப் பரிசோதனையில் எழுந்த சந்தேகத்தில் மருத்துவ குழுவினர் மகாராஷ்டிரா இளைஞர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனை செய்ய ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பியுள்ளனர்.

கோவை ரயில் நிலையத்தில் பிரத்தியேக ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் அவசர நிலையில் வரும் பயணிகளை காலதாமதமாக மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டிய சூழல் உள்ளதாக ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...