நாளை சுய ஊரடங்கு உத்தரவிற்கு பொதுமக்கள் ஆதரவு வழங்கிட வேண்டும்- கோவை மாவட்ட ஆட்சியர்.கு.ராசாமணி

கோவை: கோவை வாளையார் பகுதியில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை வாளையார் பகுதியில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டார். 

ஆய்விற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருவதாகவும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதுமான மருத்துவ குழுக்கள் போடப்பட்டு பயணிகள் சோதனை செய்யபட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், கேரள மாநிலம் கோவை மாவட்டத்தின் எல்லையாக இருக்க கூடிய சூழலில் அனைத்து சோதனை சாவடிகளிலும் மருத்துவ குழுக்கள் நியமிக்கபட்டு உள்ளனர் எனவும் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தபட்ட பின்னரே அனுமதிக்கபடுவதாக தெரிவித்தார். 

தமிழக அரசு பல்வேறு அறிவுறைகள் வழங்கி உள்ளது எனவும் இதனடிப்படையில் கேரளாவில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரக்கூடிய வாகனங்கள் மட்டும் அனுமதிக்கபட்டு உள்ளது எனவும் வாகன ஓட்டிகள் சோதனைக்கு உட்பட்டு எந்த பாதிப்பும் இல்லை என கண்டறியபட்டால் மட்டுமே அவர்கள் அனுமதிக்கபடுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

பாதுகாப்பு காரணங்களால் பொதுமக்கள் வருகை தவிர்க்கும் பொருட்டு அவர்கள் வர வேண்டாம் என அறிவுறுத்தபட்டு உள்ளதாகவும் வாகன சாவடிகளில் காவல்துறை, வருவாய்துறை, மருத்துவ துறையினர் ஈடுபடுத்தபட்டு உள்ளதாக தெரிவித்தார்.

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா சோதனை ஆய்வகம் நேற்று முதல் செயல்பட்டு வருவதாக கூறிய மாவட்ட ஆட்சியர், ஐந்து பேர் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கபட்டு உள்ள நிலையில் மூன்று பேருக்கு நெகடிவ் ரிசல்ட் வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இருவரது ரிசல்டிற்க்கு காத்திருப்பதாக தெரிவித்தார்.

பொதுமக்களும் பல்வேறு அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் நாளை காலை முதல் மாலை வரை யாரும் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டாம் என பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் கேட்டு கொண்டதற்கு இணங்க ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றவர் பெரும்பாலான அமைப்புகளும் தானேகவே முன்வந்து சுய ஊரடங்கிற்க்கு ஆதரவு தெரிவித்து உள்ளதாகவும், நாளை அரசு பேருந்துகள் குறைவான அளவில் போய் வர அனுமதிக்கபட்டு உள்ளது என தெரிவித்தார். 

24 மணிநேரமும் மருத்துவ குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், மேலும் தேவைபடும் பட்சத்தில் போதுமான அளவு மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகபடுத்தி கொள்ள முடியும், என்றார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...