நீலகிரி: உதகையில் கிருமி நாசினி, முக கவசம். உள்ளிட்ட மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்ற பிரபல மருந்து கடைக்கு மருந்து கட்டுப்பாட்டு துறையினர் இரவுநேரத்தில் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர்.

நாடு முழுவதம் கொரோனா தொற்று பரவமால் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக, நீலகிரி மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர் கொரோனா வைரஸ் அச்சத்தை போக்கும் வகையில், பரவாமல் இருக்கும் வகையிலும் தேவையான முன்னெச்சரிக்கையை முடுக்கி விட்டுள்ளனர்.
எனவே, பொதுமக்கள் சுகாதாரம் பேணி காக்க மாஸ்க், சானிட்டைசர், சானிட்டரி ஹேண்ட் வாஸ் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை வாங்க, மருந்து கடைக்கு செல்வது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், உதகையில் பல கிளைகள் கொண்ட மேசியா மருந்தகம் மாஸ்க் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை அதிக விலைக்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் மருந்து கட்டுப்பாட்டு துறையினர் சம்மந்தப்பட்ட மருந்து கடையில் ஆய்வு செய்து உறுதிப்படுத்தினர்.

இதையடுத்து, மருந்து கட்டுப் பாட்டு துறை கோவை மண்டல அதிகாரி உத்தரவின் பேரில் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் நந்தகுமார் தலைமையில், உதகை அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் பழனிசாமி, துணை இயக்குனர் பாலுசாமி, இருப்பிட மருத்துவர் பொன்ராஜராஜன் ஆகியோர் மருந்து கடையை மூடி நோட்டீஸ் ஒட்டி சென்றனர். இவர்கள் 7 நாட்களுக்கு கடை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதே போல் நாளை முதல் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.