கேரளா: கேரளாவில் நேற்று (மார்ச் 20) ஒரே நாளில் 12 பேருக்கு கோவிட்19 நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காசர்கோட்டை சேர்ந்த 6 பேருக்கும், எர்ணாகுளத்தை சேர்ந்த 5 பேருக்கும், பாலக்காட்டை சேர்ந்த ஒருவருக்கும் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேரளாவில் கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாக கூறினார்.
தற்போது மருத்துவமனைகளில் இந்நோய்க்கு 37 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலம் முழுவதும் 44,390 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 44,165 பேர் வீடுகளிலும், 225 பேர் மருத்துவமனையிலும் கண்காணிப்பில் உள்ளனர். வெள்ளிக்கிழமை புதிதாக 56 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 13,632 பேர் புதிதாக கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். 5570 பேருக்கு நோய் இல்லை என தெரிய வந்துள்ளதால் அவர்கள் கண்காணிப்பில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டுள்ளனர். இதுவரை 3456 பேரின் உமிழ்நீர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் 2393 பேருக்கு நோய் இல்லை என தெரிய வந்துள்ளதாக தெரிவித்தார்.
மீதமுள்ளவர்களின் பரிசோதனை முடிவு இதுவரை வரவில்லை எனவும் எர்ணாகுளத்தில் மூணாறுக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்திலிருந்து வந்த பாலக்காட்டை சேர்ந்த ஒருவருக்கும் இந்த நோய் உறுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த காசர்கோட்டை சேர்ந்த நபர் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பல இடங்களுக்கு சென்றது தான் இந்த நோய் அந்த மாவட்டத்தில் அதிக அளவில் பரவ காரணமாக அமைந்துள்ளது. இவர் கரிப்பூரில் விமானம் இறங்கி அங்கு தங்கிய பின்னர் மறுநாள் கோழிக்கோடு சென்றார். அங்கிருந்து ரயிலில் காசர்கோடு சென்று பொது நிகழ்ச்சிகள், கால்பந்து விளையாட்டு மற்றும் திருமண விழாக்களிலும் இவர் கலந்து கொண்டுள்ளார். இவர் பலருடன் தொடர்பு வைத்திருந்ததால் காசர்கோட்டில் மேலும் பலருக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தான் இந்த மாவட்டத்தில் கடுமையான நிபந்தனைகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், அடுத்த ஒரு வாரத்திற்கு காசர்கோடு மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்படும். இரண்டு வாரத்திற்கு அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்படும். இரண்டு வாரத்திற்கு கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டிருக்கும். இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளப்புகளும் மூடப்படும். காசர்கோட்டை சேர்ந்த 2 எம்எல்ஏக்களும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். காசர்கோட்டில் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் அங்கு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதால் தான் மாநிலம் முழுவதும் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எல்லோருக்கும் நோய் பரவக் கூடாது என்பதற்காகத்தான் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. இது வரை அனைவருக்கும் வேண்டுகோள் மட்டுமே விடுக்கப்பட்டு வந்தது இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
உள்ளாட்சி அமைப்புகளில் சொத்துவரி அபராதம் இல்லாமல் கட்டுவதற்கும், வியாபார லைசன்ஸ் உள்பட புதுப்பிப்பதற்கும் கடைசி தேதி ஏப்ரல் 30 ஆக நிர்ணயிக்கப்படும் என்றும் வருவாய்த்துறையின் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 22 தனியார் மருத்துவக் கல்லூரி விடுதிகளில் உள்ள 4,400 அறைகள் கொரோனா நல மையங்களாக அமைக்க அவர்கள் சம்மதித்துள்ளனர். முகக் கவசம், கையுறை, கிருமிநாசினி மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவற்றை இருப்பு வைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், வரும் 22ம் தேதி நாடு முழுவதும் கொண்டு வரப்பட உள்ள மக்கள் ஊரடங்கு சட்டத்திற்கு கேரளாவும் ஆதரவு தெரிவிக்கும் எனவும் அந்தநாளில் அரசு பஸ்கள் இயக்கப்பட மாட்டாது, மெட்ரோ ரயில்களும் நிறுத்தப்படும். அன்றைய தினம் அவரவர் தங்களது வீடுகளை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.