திருப்பூரில் மார்க்கெட் கடைகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டையை கழற்றி அரை நிர்வாணப் போராட்டம்!

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் அனைத்து கட்சி சார்பில் சட்டையை கழற்றி அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் அனைத்து கட்சி சார்பில் சட்டையை கழற்றி அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள பழைய மார்க்கெட் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த கடைகள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படுவதாக மாநகராட்சி அறிவித்திருந்தது. அதுவரை தற்காலிகமாக வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தேவையான வசதிகள் இல்லாத காரணத்தால் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த பிறகு மார்க்கெட்டை இடிக்க வேண்டும் எனவும் அதேபோல் புதிதாக கட்டப்படும் இடத்தில் தங்களுக்கான கடைகளை ஒதுக்கீடு செய்யும் உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என கூறியிருந்தனர். 



ஆனால், எந்தவித உத்தரவாதமும் அளிக்காமல் இன்று காலை திடீரென மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் கடைகளை இடிக்க வந்ததை கண்டித்து மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் திமுக, மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் சட்டையை கழற்றி அதிகாரிகளை மார்க்கெட்டில் நுழைய விடாமல் மார்க்கெட் நுழைவுவாயிலில் அமர்ந்து அரைநிர்வாண தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...