திருப்பூர்: திருப்பருக்கு பல்வேறு வெளிநாடுகளிலிருந்து வந்த 19 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு கொரோனா அறிகுறி எதுவும் இல்லை என்றாலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.
திருப்பூர்: திருப்பருக்கு பல்வேறு வெளிநாடுகளிலிருந்து வந்த 19 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு கொரோனா அறிகுறி எதுவும் இல்லை என்றாலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், மத்திய அரசு அறிவித்துள்ள படி இத்தாலி, சீனா உள்ளிட்ட 7 நாடுகளிலிருந்தும் திரும்பிய 19 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை சோதனை செய்த போது கொரோனா வைரஸ்சுக்கான அறிகுறிஇல்லை என்றாலும் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக திருப்பூருக்கு வெளிமாநிலங்களில் இருந்து பணிக்காக அழைத்து வரும் வட மாநில தொழிலாளர்களை முறைப்படுத்துவது குறித்த பின்னலாடை துறையினருடன் ஆலோசித்து வருவதாக ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும் முக கவசம், கையுறை தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உற்பத்தி செய்வது குறித்து ஆலோசனை செய்து வருவதாக ஆட்சியர் கூறினார்.
திருப்பூர் மாவட்டத்தைப்பொறுத்தவரை கொரோனா அறிகுறியுடன் எந்த ஒரு நபரும் இதுவரை இல்லை எனவும் அப்படி கொரோனா வைரஸ் பாதிப்போடு வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும் ஆட்சியர் விஜயகார்த்திக்கேயன் தெரிவித்தார்.
அதே போல் கொரோனா வைரஸ் குறித்த தவறான வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.