கொரோனா எதிரொலி: கோவை ஆதியோகி தியானலிங்க வளாகம்‌ தற்காலிகமாக மூடல்‌!

கோவை: கொரோனா வைரஸ்‌ பரவாமல்‌ தடுக்கும்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை ஈஷாவில்‌ உள்ள ஆதியோகி மற்றும்‌ தியானலிங்க வளாகம்‌ இன்று (மார்ச்‌ 20) முதல்‌ தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கோவை: கொரோனா வைரஸ்‌ பரவாமல்‌ தடுக்கும்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை ஈஷாவில்‌ உள்ள ஆதியோகி மற்றும்‌ தியானலிங்க வளாகம்‌ இன்று (மார்ச்‌ 20) முதல்‌ தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈஷா மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மத்திய அரசின்‌ வழிகாட்டுதல்படி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, மறு அறிவிப்பு வெளியாகும்‌ வரை பொதுமக்கள்‌ ஈஷாவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்‌. மேலும்‌, தமிழகம்‌ முழுவதும்‌ உள்ள மகாத்மா பசுமை இந்தியா இட்டத்தின்‌ நாற்றுப்பண்ணைகளும்‌ ஈஷா நர்சரிகளும்‌ மார்ச்‌ 31-ம்‌ தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கும்‌.

முன்னதாக, உலகம்‌ முழுவதும்‌ நடைபெற இருந்த ஈஷா யோகா வகுப்புகள்‌ அனைத்தும்‌ கடந்த வாரம்‌ ரத்து செய்யப்பட்டது. மேலும்‌, ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு மும்பையில்‌ நடத்தவிருந்த 'இன்னர்‌ இன்ஜினியரிங்‌: யோகா வகுப்பும்‌, தென்‌ ஆப்பிரிக்க பயணமும்‌ தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...