குழந்தையை கணவர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக கூறி உதகை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு!

நீலகிரி: பெண் குழந்தையை கணவர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக கூறி உதகை ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று குழந்தைகளுடன் பெண் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி: பெண் குழந்தையை கணவர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக கூறி உதகை ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று குழந்தைகளுடன் பெண் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சூண்டி பகுதியைச் சேர்ந்த பெண் (ரமலா) திருமணமாகி 16 ஆண்டுகளாகிய நிலையில் மேட்டுப்பாளையம் சிறுமுகையில் வசித்து வருகிறார். தனக்கு மூன்று குழந்தைகள் உள்ளதாகவும், தன் கணவர் முஸ்தபா பெண் குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாகவும் மற்றும் தங்களை சித்ரவதை செய்வதாகவும் பலமுறை சிறுமுகை காவல் துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, தனியாக தனது சகோதரி வீட்டில் உள்ள தங்களிடத்தில் தனது கணவர் கொன்றுவிடுவேன் என்று பகிரங்கமாக மிரட்டி வருவதாக தீக்குளிக்க முயன்ற பெண் உதகையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினரிடம் கூறினார்.



எனவே, தனக்கும் தன் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தித் தரவேண்டும், தனது கணவரால் எந்நேரமும் தங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு இதற்கான தீர்வு கிடைக்க வேண்டுமென்று தீக்குளிக்க முயன்றதாகவும் நடவடிக்கை எடுக்காவிடில் தான் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர தனக்கு வேறு வழி இல்லை என கண்ணீருடன் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் போலீசாரிடம் கூறினார்.

உதகை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...