கொரோனா அச்சுறுத்தல்: கோவை - கேரள எல்லையின் அனைத்து சோதனைச் சாவடிகள் இன்று மாலை முதல் மூடல் - மாவட்ட ஆட்சியர்

கோவை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக கேரள மாநில எல்லையோரத்தில் உள்ள கோவை மாவட்டத்தின் அனைத்து சோதனைச் சாவடிகளும் இன்று (20-02-2020) மாலை முதல் மூடப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி அறிவித்துள்ளார்.


கோவை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக கேரள மாநில எல்லையோரத்தில் உள்ள கோவை மாவட்டத்தின் அனைத்து சோதனைச் சாவடிகளும் இன்று (20-02-2020) மாலை முதல் மூடப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்‌ தெரிவித்துள்ளதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ உத்தரவின்படி, கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதன்‌ காரணமாக இதுவரை கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ கொரோனா வைரஸ்‌ பாதிப்பு இல்லை என்ற நிலையிலும்‌, நோய்‌ துடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டு வருகிறது. மேலும்‌, பொதுமக்களிடத்தில்‌ தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில்‌, அருகாமையில்‌ உள்ள கேரளா மாநிலத்தில்‌ இருந்து வரும்‌ பயணிகள்‌ மூலம்‌ கொரோனா வைரஸ்‌ பரவாமல்‌ தடுப்பதற்கு ஆம்னி பேருந்துகள்‌ மற்றும்‌ சுற்றுலா பேருந்துகள்‌, அரசு பேருந்துகள்‌, கார்‌, சரக்கு வாகனங்கள்‌ ஆகியவைகளை முழுமையாக கிருமி நாசினி கொண்டு தூய்மைப் படுத்தும்‌ பணி மாநிலத்தின்‌ எல்லைப்பகுதிகளான வாளையார்‌, முள்ளி, மேல்பாவியூர்‌, வேலந்தபாளையம்‌, வீரப்பகவுண்டனூர்‌, கோபாலபுரம்‌, மீனாட்சிபுரம்‌, வழுக்குப்பாறை, ஆனைகட்டி ஆகிய சோதனை சாவடிகளில்‌ சுகாதார முன்னெச்சரிக்கைத்‌ தடுப்பு நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வந்தது.

தற்போது கொரோனா வைரஸ்‌ தடுப்பு நடவடிக்கை காரணமாக கேரள மாநிலத்தின்‌ எல்லையோரத்தில்‌ உள்ள கோயம்புத்தூர்‌ மாவட்டத்தின்‌ சோதனை சாவடிகளான வாளையார்‌, முள்ளி, மேல்பாவியூர்‌, வேலந்தபாளையம்‌, வீரப்பகவுண்டனூர்‌, கோபாலபுரம்‌, மீனாட்சிபுரம்‌, வழுக்குப்பாறை, ஆனைகட்டி ஆகிய ஒன்பது சோதனை சாவடிகளும்‌ இன்று மாலை முதல்‌ மூடப்படுகிறது.

கோவை மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்திற்கும்‌, கேரள மாநிலத்திலிருந்து கோயம்புத்தூர்‌ மாவட்டத்திற்கும்‌ அனைத்து வாகன தொடர்பு நிறுத்தி வைக்கப்படுகிறது. இப்பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய்துறை காவல்துறை போக்குவரத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்தார்‌.

Newsletter

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...