திருப்பூர்: திருப்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட தகவல் உண்மையில்லை எனவும் அது போன்ற வதந்திகளை பரப்புவோர் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை 195 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதனிடையே, கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் வரவு வருகிறது.
இந்த நிலையில், கொரானா வைரஸ் பரவலால் திருப்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட தகவல் உண்மையில்லை எனவும் அது போன்ற வதந்திகளை பரப்புவோர் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ட்விட்டர் மூலம் எச்சரித்துள்ளார்.